மனிதர்கள் சாப்பிடும் உணவில் தான் அவர்களின் ஆரோக்கியம் அடங்கியுள்ளது. அதன்படி மொத்த ஆரோக்கியமும் வயிற்றுக்குள் தான் இருக்கிறது.
அப்படியான வயிற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியமாகும். நம் வயிறு கெட்டுப் போயிருப்பதை சில அறிகுறிகளின் மூலம் அறியலாம். வாய் துர்நாற்றம் வீசும். பசி இருக்காது. வயிற்றில் அதிகமான நச்சுத்தன்மை தங்கி சின்ன, சின்ன பூச்சிகள் உருவாகும்.
இதனால் நாளடைவில் வயிறு உப்புசம், தொப்பை முதலியவை ஏற்படும். இதை எல்லாத்தையுமே சரி செய்ய இயற்கை வைத்திய முறைகள் உள்ளன. அதன்படி, சுத்தமான மிதமான சூட்டில் ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீ ஸ்பூன் அளவுக்கு விளக்கெண்ணெய் சேர்க்க வேண்டும்.
இந்த ஆமணக்கு எண்ணெய் அதாவது விளக்கெண்ணெய், நம் வயிற்றை அதிக அளவுக்கு சுத்தம் செய்யும். அந்த காலத்தில் நம் முன்னோர்கள் வயிற்றை சுத்தப்படுத்த இந்த ஆமணக்கு எண்ணெயைத் தான் பயன்படுத்துவார்கள்.
இது உடனடியாக மலச்சிக்கலைத் தீர்த்து நம் வயிற்றில் இருக்கும் கிருமிகளை வெளித்தள்ளி விடும். மேலும் இந்த கிருமிகளை வராமலும் தடுக்கும்.
இந்த கலவையோடு அரை ஸ்பூனுக்கு உப்பும் சேர்த்துக்கலாம். பாதி எழுமிச்சையையும் இதனோடு சேர்க்க வேண்டும். இதனால் சளித்தொல்லையும் வராது.
இந்த பானத்தை வாரம் ஒருமுறை எடுத்துக்கலாம். இதை வெறும் வயிற்றில் தான் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதற்கு முன்பு சாதாரண பச்சைத்தண்ணீர் அரை கிளாஸ் குடித்துக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் இதைக் குடிக்க வேண்டும். மிதமான சூட்டில் இருக்கும் தண்ணீரை குடித்தாலே நம் வயிறு சுத்தம் ஆக ஆரம்பிக்கும். இந்த தண்ணீரைக் குடித்த 15 நிமிடத்திலேயே நம் வயிறு சுத்தமாவதை உணரலாம்.