என்னதான் பெரிய திரை படங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வெளியானாலும், சின்னத்திரைக்கு என்றுமே தனி மவுசு தான்.
பட்டிதொட்டி எங்கும் வீடுகளில் ஒருத்தராகவே வாழ்ந்து வருகிறார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள், அந்த வகைளில் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து டாப் ரேட்டிங்கில் சென்று கொண்டிருக்கிறது ரோஜா சீரியல்.
சிறுவயதில் நடந்த விபத்து மூலம் தாய், தந்தையை விட்டு பிரியும் ரோஜா ஆசிரமத்தில் வளர்கிறார், ஒரு கட்டத்தில் தன்னுடைய மாமா மகனையே திருமணம் செய்து கொண்டு வாழ ஆரம்பிக்கிறார்.
பின்னாளில் இந்த உண்மைகள் அர்ஜீன் மூலம் ரோஜாவுக்கு தெரியவருகிறது, செண்பகத்தின் பொண்ணு என சொல்லிக் கொண்டு அந்த வீட்டுக்குள் நுழையும் அனுவால், பல கஷ்டங்களை அனுபவிக்கிறார் ரோஜா.
இந்நிலையில் நேற்று அனுவின் பிறந்தநாள், தன்னுடைய மகளுக்காக டைகர் மாணிக்கம் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்கிறார்.
விழா கொண்டாட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் போது, ரோஜா மீது வீண் பழி சுமத்துகிறார்கள், தன்னுடைய மனைவி குற்றம் செய்யவில்லை என அர்ஜீன் நிரூபித்துக் கொண்டு, தன்னுடைய மனைவிக்காக அழகான நெக்லஸையும் பரிசாக அளிக்கிறார்.
அப்போது, போலீசார் நீதிபதியுடன் உள்ளே நுழைய, என்ன நடக்கப் போகிறது என குடும்பமே அதிர்ச்சியில் உறைகின்றனர், அர்ஜீன் உண்மைகள் வெளியாகும் நாள் இன்று, ரோஜா தான் செண்பகம் அத்தையின் உண்மையான மகள் என கூறுவதுடன் எபிசோட் முடிகிறது.
இன்று குடும்பத்துக்கே உண்மை தெரியவந்து, அனு பையா கணேஷ் கொலை வழக்கில் கைதாவார் என தெரிகிறது, இதையே ரோஜா சீரியல் ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.