காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் சொந்த அண்ணனையே கூலிப்படையை ஏவி கொலை செய்த பிரபல நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிரபல ஹிந்தி நடிகை ஷான்யா என்பவர் மும்பையில் வசித்து வருகிறார்.
இவர் தனது மேனேஜர் நியாஸ் அகமது என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த காதல் ஷான்யாவின் அண்ணன் ராகேஷ் என்பவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இதுகுறித்து அவர் தனது தங்கையை கண்டித்துள்ளார்.
இதனால் ஷான்யாவுக்கும் ராகேஷ்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ஷான்யா தனது காதலனுடன் இணைந்து கூலிப்படைமூலமாக ராகேஷை கொலை செய்துள்ளதாக தெரிகிறது.
கூலிப்படையினர் ராகேஷை கொலை செய்து பிணத்தை கர்நாடக மாநிலம் தார்வார் என்ற பகுதியில் தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை செய்தபோது கை, கால் துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்த பிணம் ராகேஷ் என்பதை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் மேலும் தீவிரமாக விசாரணை செய்தபோது ராகேஷின் தங்கை ஷான்யா தான் தனது காதலரின் உதவியால் சொந்த அண்ணனையே கூலிப்படை ஏவி கொலை செய்த தகவல் தெரியவந்தது. இதனை அடுத்து ஷான்யா மற்றும் அவரது காதலனிடம் விசாரணை செய்த போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. காதலுக்காக தனது சொந்த அண்ணனையே கூலிப்படையை வைத்து கொலை செய்த பிரபல நடிகை ஒருவரின் செயல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.