நாட்டின் மற்றுமொரு பிரதேசம் மறு அறிவித்தல் வரை முடக்கப்படுவதாக சற்று முன்னர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அதிகாரிகொட கிராம உத்தியோகத்தர் பிரிவே இவ்வாறு முடக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், குறித்த பிரதேசம் இன்று மாலை முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 6.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கும்புக்கெட்டே பொலிஸ் பிரிவின் நிராவிய கிராம உத்தியோகத்தர் பிரிவு (441) மற்றும் வெல்லவ பொலிஸ் பிரிவின் நிகதலுபொத்த கிராம உத்தியோகத்தர் பிரிவு (1185) நேற்று காலை 7.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.