நடிகர் விஷால் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் விஷால் நற்பணி இயக்க செயலாளர் ஹரி கிருஷ்ணன் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கொடுத்துள் புகாரில் கூறி இருப்பதாவது:-
சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட ஒரு செய்தியில், விஷால் தமிழக மக்களை மோசமான வார்த்தைகளால் திட்டியதாக அவதூறு செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதற்கு விஷால் அளித்த பதிலில், இணையதளத்தில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது. நான் தமிழக மக்களை பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண் பழி சுமத்துவது போல் இந்த அவதூறு செய்தியை வெளியிட்டுள்ளனர். என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழக மக்களின் மனதில் விஷால் மீது வேற்றுமை ஏற்படுத்த முயன்ற ‘வெப்சைட்’ மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர சமீபகாலமாக, அடையாளம் தெரியாத நபர்கள் போன் மூலம் தகாத வார்த்தைகளால் விஷாலை திட்டுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார் .