2021-ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற சீன பெண் இயக்குநர் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் 2021-ன் சிறந்த இயக்குநர் விருதை நோ மேட் லாண்ட் (Naomadland) படத்துக்காக சீன பெண் இயக்குநர் க்ளோயி சாவ், 39 (Chloe Zhao) பெற்றார்.
இதன் மூலம் Chloe Zhao ஆஸ்கர் விருதை பெற்ற முதல் ஆசிய பெண் இயக்குநர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அதேபோல், ஆஸ்கர் வரலாற்றிலேயே சிறந்த இயக்குநருக்கான விருதை பெற்ற இரண்டாவது பெண் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
இவருக்கு முன்பாக 2010-ஆம் ஆண்டு Katheryn Bigelow என்ற அமெரிக்க பெண் The Hurt Locker என்ற படத்துக்காக சிறந்த இயக்குநருக்கான ஆஸ்கர் விருதை பெற்றார். அவர் பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி திங்கள் காலை 5.30 மணி) துவங்கிய இந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் இன்றி நடந்து வருகிறது.
மேலும், சிறந்த நடிகருக்கான விருதை Anthony Hopkins மற்றும் சிறந்த நடிகைக்கான விருதை Frances McDormand பெற்றனர்.
அதேபோல், சிறந்த படமாக Nomadland திரைப்பம் மற்றும் சிறந்த திரைக்கதைக்காக Promising Young Woman திரைப்படமும் தேர்வாகியுள்ளன. அதனைத் தொடர்ந்து பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.