நாட்டின் மேலும் சில பிரதேசங்கள் இன்றிரவு 8 மணி முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்படவுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதன்படி கம்பஹா மாவட்டத்தின் கொட்டதெனியாவ காவல்துறை பிரிவின் பொல்ஹேன, ஹீரெலுகெதர, களுவக்கல ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
மினுவாங்கொடை காவல்துறை அதிகார பிரிவுக்கு உட்பட்ட அஸ்வென்னவத்தை வடக்கு மற்றும் கிழக்கு கிராம சேவகர் பிரிவுகளும் இன்றிரவு 8 மணியுடன் தனிமைப்படுத்தப்படவுள்ளது.
களுத்துறை மாவட்டத்தின் மீகாத்தென்னை காவற்துறை அதிகாரப்பிதேசத்தில் மிரிஸ்வத்தை, மற்றும் பெலவத்தை வடக்கு ஆகிய கிராமசேவகர் பிரிவுகளும், திருகோணமலை காவற்துறை பிரிவிலுள்ள பூம்புஹார் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தம்புள்ளை விசேட பொருளாதார மத்திய நிலையமும் இன்று இரவு 8 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளது.