உலக அளவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டது தான் வாட்ஸ் ஆப் செயலி. பயனாளர்களை கவருவதற்காக அடிக்கடி புது புதிய அப்டேட்களை கொடுத்து வருகிறது.
அந்த வகையில், வாட்ஸ்ஆப்பில் அனுப்பப்படும்/பெறப்படும் செய்தியை மறைய வைக்கும் வசதி சமீபத்தில் அறிமுகமாகியிருக்கிறது.
அதாவது, ஒருவருக்கு அனுப்பும் செய்தியை அல்லது ஒருவரிடம் இருந்து பெறும் செய்தி ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மறைந்துபோகும்.
இதற்கான கட்டுப்பாடு பயனர்களின் கையில் இருக்கும். ‘Disappearing Messages’ என்ற வசதியை பயன்படுத்தி செய்திகளை மறைய வைக்கலாம்.
மேலும், இதில் ‘7 நாள்கள்’ என்ற வசதி ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. அதாவது நீங்கள் அனுப்பும் அல்லது பெறப்படும் செய்தி 7 நாள்களில் மறைந்துபோகும்.
ஆனால், தற்போது 24 மணி நேரத்தில் மறையும் கட்டுப்பாட்டை வாட்ஸ்ஆப் அறிமுகப்படுத்த உள்ளது. இதனால், பயனர், ‘Disappearing Messages’ வசதியை ‘ஆன்’ செய்து, ’24 மணி நேரம்’ என்பதை தேர்வு செய்தால் நீங்கள் அனுப்பும்/பெறப்படும் செய்தி அடுத்த 24 மணி நேரத்தில் மறைந்து போய்விடும்.
ஆனால், அது மறைவதற்கு முன்பாக ஸ்கீரீன் ஷாட் எடுத்து சேமிக்க முடியும் என்பது தான் வருத்தம். இதை பயன்படுத்த, வாட்ஸ்ஆப்பில் ஏதேனும் ஒரு தொடர்பை(Contacts) தேர்வு செய்து, மேலே தொடர்பை கிளிக் செய்யவும்.
நீங்கள் தேர்வு செய்த நபரின் விவரங்களுக்கு கீழே ‘Disappearing Messages‘ வசதி இருக்கும். இதனை ‘ஆன்’ செய்து செய்திகள் மறையும் இந்த வசதியை பயன்படுத்தலாம்.