ஷங்கர் இயக்கத்தில் பிரபுதேவா, நக்மா நடித்த படம் – காதலன். இதில் இடம்பெற்ற – ‘டேக் ஈசி ஊர்வசி’ பாடல் வைரமுத்து எழுத, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து பபட ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றது.
இந்நிலையில், ஏ.ஆர். ரஹ்மான் சமகாலத்துக்கு ஏற்றவாறு புதிய வரிகளுடன் மேடையில் பாடுவதற்காக ரசிகர்களிடம் ஒரு வேண்டுகோள் வைத்தார்
இந்த பாடலை இன்றைய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றித்தரவேண்டும். ஆனால் நடந்துமுடிந்த அமெரிக்கத் தேர்தல், ஹிலாரி கிளிண்டன், ட்ரம்ப், ரூபாய் நோட்டு விவகாரம் போன்றவற்றை முன்வைத்து வரிகள் இருக்கக்கூடாது.
சுவாரசியமாக, நகைச்சுவையாக, மூலப் பாடலின் தரத்துக்கு இருக்கவேண்டும் என்று ஃபேஸ்புக்கில் கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு ஆயிரக்கணக்கான பேர் பதில் அளித்திருந்தார்கள்.
தனது பிறந்தநாளன்று போட்டியின் முடிவை அறிவித்தார் ரஹ்மான். அவர் தேர்வு செய்த வரிகள்:
“பெல்ட் போட்டு வேஷ்டி அவுந்தா டேக் ஈசி ஊர்வசி
ஹெல்மெட் போட்டும் மாமா பிடிச்சா டேக் ஈசி ஊர்வசி
கடலை நடுவில் பேட்டரி தீர்ந்தா டேக் ஈசி ஊர்வசி
கிழிஞ்ச பேண்ட்டை ஃபேஷன்னு சொன்னா டேக் ஈசி ஊர்வசி…