தமிழகத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாடு முழுவதும் மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை. ஆனால் மினி ஊரடங்கு போன்று பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் அடுத்துவரும் 10 நாட்கள் தமிழக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை எழும்பூர் தாய்சேய் நல மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்ற மாநிலங்களில் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டுமே அரசு மூலம் ரெம்டெசிவர் மருந்து விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
கொரோனா தொற்று ஏற்பட்ட அனைவருக்கும் ரெம்டெசிவர் மருந்து அவசியம் இல்லை என்று கூறிய அவர், நோய் பாதித்த 30 சதவீத நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படும் என விளக்கமளித்தார்.
மேலும் தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதாகவும், அடுத்த 10 நாட்களுக்கு பொதுமக்கள் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது..10 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கை தேவை : ராதாகிருஷ்ணன் அறிவுரை!
![கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது..10 நாட்களுக்கு மிகவும் எச்சரிக்கை தேவை : ராதாகிருஷ்ணன் அறிவுரை!](https://www.theevakam.com/wp-content/uploads/2021/04/fh-19.jpg)
Loading...
Loading...
Loading...