பிரித்தானியாவின் இங்கிலாந்தில் இருக்கும் குறிப்பிட்ட ஐந்து பகுதிகளில் கொரோனா விகிதம் மிகவும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகமே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயங்கிக் கொண்டிருந்த போது, பிரித்தானியா தங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்காக, அவசரகால தடுப்பூசியை அறிவித்தது.
இதன் பயனாக பிரித்தானியாவில் இப்போது கொரோனா பரவலும் குறைந்திருக்கிறது, பலி எண்ணிக்கையும் குறைந்திருக்கிறது.
இருப்பினும், இங்கிலாந்தில் இருக்கும் குறிப்பிட்ட சில பகுதிகளில் கொரோனா பரவும் விகிதம் அதிகரித்துள்ளதாக Public Health England தரவுகளின் படி கூறப்படுகிறது.
அதன் படி North Yorkshire-ல் உள்ள Selby சமீப நாட்களில் கொரோனா பரவல் அதிக உயர்வை கண்டுள்ளது. இங்கு 100000 பேரில் 109.2 பேருக்கு புதிதாக கொரோனா பரவி வருகிறது.
ஆனால், முந்தைய வாரங்களில் இது 46.3 ஆக இருந்தது.
இதைத் தொடர்ந்து Lancashire-ல் உள்ள Hyndburn-ல் 100,000 பேரில், 60.5 பேருக்கு புதிதாக பரவி வருகிறது.
ஆனால், இது முந்தைய வாரத்தில், 27.1 ஆக இருந்தது. அதே போன்று Hertfordshire-ல் உள்ள Dacorum உள்ளது. இங்கு முந்தைய வாரம் 12.9 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அது இப்போது 36.8-ஆக அதிகரித்துள்ளது.
Buckinghamshire-ல் உள்ள Chiltern-ல் 3.1-ஆக இருந்த பரவல் இப்போது 25.0 ஆக உயர்ந்துள்ளது. Cambridge 100,000-பேரில் 64.1 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு வாரத்திற்கு முன்பு 43.3 ஆக இருந்தது.
மேலும், இங்கிலாந்தின் Kirklees இரண்டாவது மிகப் பெரிய கொரோனா தொற்று விகிதத்தை சமீபத்தில் கொண்டுள்ளது.
இங்கு கடந்த வாரம் தொற்று எண்ணிக்கை 58.9-ல் இருந்து 71.9-ஆக உயர்ந்துள்ளது. மூன்றாவதாக North Lincolnshire உள்ளது. இங்கு கடந்த வாரம் 55.7-ஆக இருந்தது, இப்போது 66.7 வரை அதிகரித்துள்ளது.
இதே போன்று நான்காவதாக Doncaster 65.7 கொரோனா தொற்று வழக்காக இருந்தது, இப்போது இங்கு அது 73.7 ஆகவும், கேம்பிரிட்ஜ் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. Essex உள்ள Maldon, மிகக் குறைந்த தொற்று வீதத்தைக் கொண்டுள்ளது,
கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி வரையிலான வாரத்தில் எந்த ஒரு புதிய கொரோனா பாதிப்புகள் இங்கு பதிவு செய்யப்படவில்லை. இந்த பகுதியில் கடந்த வாரம் 100,000 பேரில் 6.2 பேருக்கு நோய் தொற்று பரவுவதாக கூறப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.