தெலுங்கு படவுலகில் மெகா சூப்பர்ஸ்டாராக திகழ்பவர் சிரஞ்சீவி. இவர் முழு நேர கதாநாயகனாக நடித்த திரைப்படம் கடைசியாக கடந்த 2007 ஆண்டு வெளிவந்தது.
பின்னர் முழு நேர அரசியலில் ஈடுப்பட்ட அவர் தமிழில் நடிகர் விஜய் நடித்து வெளிவந்த கத்தி படத்தின் ரீமேக்கான கைதி எண் 150 என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படம் சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக பிரபல நடிகை காஜல் அகர்வால் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சிரஞ்சீவி மற்றும் காஜல் அகர்வால் இடையே காதல் காட்சிகள் இருக்கிறது.
இதன் படப்பிடிப்பு நடக்கும் போது ஒரு காட்சியில் சிரஞ்சீவி காஜல் அகர்வாலின் தோளில் கையை போடுவது போல எடுக்கப்படவேண்டியுள்ளது. ஆனால் தன்னை விட வயதில் மிக இளையவரான காஜலை தொட வெட்கப்பட்டு சிரஞ்சீவி டென்ஷனாகியுள்ளார்.
தன்னை தொட்டு நடிக்க சிரஞ்சீவி சங்கடப்படுவதை பார்த்த காஜல் சும்மா தொடுங்க சார், இதெல்லாம் வெறும் நடிப்பு தான் என அவரை சமாதானபடுத்தி அந்த காட்சியில் நடிக்க வைத்தாராம்.