நாட்டில் கொரோனா அச்சம் காரணமாக மேலும் சில பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய பொலன்னறுவை மாவட்டத்தின் எலஹெர மற்றும் சரும்பிம ஆகிய கிராம சேவகப் பிரிவுகளிலுள்ள கிராமங்கள் இன்று முதல் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகவலை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதேவேளை, களுத்துறை மாவட்டத்திலும் பல பிரதேசங்கள் இன்று முதல் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பதுரலிய பொலிஸ் பிரிவு, பொல்லுன்ன கிராம சேவகப்பிரிவு, இங்குருதலுவ சேவகப்பிரிவு, மிதலன சேவகப்பிரிவு, மோரப்பிட்டிய சேவகப்பிரிவு, பெலேந்த சேவகப்பிரிவு, ஹெடிகல்ல சேவகப்பிரிவு மோரப்பிட்டிய வடக்கு சேவகப்பிரிவு, தீனியாவல பொலிஸ் பிரதேசம், தீனியாவல சேவகப்பிரிவு, மீகஹதென்ன பொலிஸ் பிரதேசம், வலல்லாவிட்ட தெற்கு சேவகப்பிரிவு, மாகந்தலாவ சேவகப்பிரிவு, போத்தலாவ சேவகப்பிரிவு, கட்டுயகெலே – வெல்மீட்டிகொட சேவகப்பிரிவு, கீழ் அவஸ்ஸ சேவகப்பிரிவு, மிரிஸ்வத்த சேவகப்பிரிவு, பெவலத்த மேற்கு சேவகப்பிரிவு ஆகிய பகுதிகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளன.