சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
கொரோனா தொடர்பான அனைத்து புகார்களை தெரிவிக்கவும், தேவைகளை தெரிந்து கொள்ளும் வகையிலும் ஏற்கனவே 104 என்ற கட்டுப்பாட்டு மையம் உருவாக்கபட்டது. தற்போது கட்டுபாட்டு மையத்துக்கு அருகிலே ஒருங்கிணைந்த கட்டளை மையம் (கமெண்ட் சென்டர்) உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு கொரோனாவுக்கு தேவையான அனைத்து சேவைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இதற்காக @104GoTN என்ற ‘டுவிட்டர்’ வலைதளம் கையாளப்படுகிறது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருவள்ளூர், சேலம், மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தூத்துக்குடி போன்ற மாவட்டங்கள் சவாலாக தான் உள்ளது. அதேபோல் சென்னை, ராணிப்பேட்டை, தேனி, கோவை போன்ற மாவட்டங்கள் நோய் உறுதி அளவு அதிகமாக உள்ளது..
கொரோனா சிகிச்சை அளிக்க பரிந்துரைக்கப்பட்ட அனைத்து தனியார் மருத்துவமனைகளும் கண்காணிப்பில் உள்ளது. தேவையில்லாதவர்களுக்கு ரெம்டெசிவிர் மருந்து டாக்டர்கள் பரிந்துரைத்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 10 நாட்களில் சாதாரண அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டும் என தனியார் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.
தமிழகத்தி 50 சதவீதம் பேர் வீட்டுத்தனிமையிலும், 30 சதவீதம் பேர் மருத்துவமனையிலும், 10 சதவீதம் பேர் கொரோனா பராமரிப்பு மையத்திலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 468 படுக்கைகள் கூடுதலாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்றைய தேதி வரை 3,329 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வைரஸை கட்டுப்படுத்துவதில் 10 மாவட்டங்கள் சவாலாக உள்ளன – சுகாதாரத்துறை செயலாளர்
Loading...
Loading...
Loading...