ஐபிஎல் தொடரின் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற முக்கிய காரணமாக இருந்த ருத்துராஜ் கெய்க்வாட்டை இலங்கை ஜாம்பவான் அர்னால்ட் பாராட்டியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இப்போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.
அடுத்து விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 18.3 ஓவர்களின் 3 விக்கெட்களை இழந்து 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சென்னை அணி சார்பில் ருத்துராஜ் கெய்க்வாட் 75 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த நிலையில் கெய்க்வாட்டை இலங்கை அணியின் முன்னாள் வீரர் ருசல் அர்னால்டு பாராட்டியுள்ளார்.
அவரின் டுவிட்டர் பதிவில், ருத்துராஜ் கெய்க்வாட் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் தனது ஆட்டத்தில் மேம்பட்டு கொண்டே வருகிறார். அற்புதமாக டைமிங்கில் பந்துகளை கணித்து விளையாடுகிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.