பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தாத வகையில் மிகவும் சிறப்பான முறையில் கட்டுநாயக்க விமான நிலையத்தின் செயற்பாடுகள் அமைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைத்துக் கொண்டு புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக இலங்கையின் தேசிய விமான சேவையான ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓடுதளத்தின் புனரமைப்பு நடவடிக்கை காரணமாக ஜனவரி மாதம் 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரை காலை 8.30 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக 5 மணித்தியாலத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகைத் தருமாறு அனைத்து பயணிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எப்படியிருப்பினும், ஸ்ரீலங்கன் விமான சேவை, சிவில் விமான சேவை அதிகார சபை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் திறமை காரணமாக விமான நிலையத்தின் நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ள முடியும் என அந்த விமான சேவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முடிந்தவரை திறமையான மற்றும் வலுவான சேவை வழங்குவதற்கு அனைத்து தரப்பில் இருந்து கிடைக்கும் ஆதரவினை மதிப்பதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.
இந்த சவால் மிக்க காலப்பகுதியினுள் சிரமங்களை பாராமல் செயற்படுவது தொடர்பில், விமான நிலைய ஊழியர் சபைக்கும், நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்