Loading...
பொதுவாக அடிக்கடி கட்டுப்பாடு இல்லாமல் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் இந்த பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.
இது மாதிரியான பிரச்சனைக்கு யூரினரி இன்காட்டினன்ஸ் என்று பெயராகும். மேலும் இந்த வகை பிரச்சனையில் பல வகைகள் இருக்கிறது.
Loading...
எனவே அடிக்கடி எதனால் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது என்பதற்கான காரணங்களை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கான காரணங்கள் என்ன?
- நமது உடம்பில் சிறுநீர் குழாய் மிகவும் இறுக்கமாக இடுப்பெலும்பு பகுதியில் அமைந்திருக்கும். இடுப்பெலும்பு பலவீனம்டையும் போது, சிறுநீர் குழாய் தளர்வடைந்து உடனடியாக சிறுநீரை வெளியேற்ற தூண்டுகிறது.
- சிறுநீர்ப்பை அளவில் சிறிதாக இருப்பதால், அதில் குறைந்த அளவே சிறுநீரை தேக்கிக் கொள்ள முடியும். இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படுவார்கள். எனெனில் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைக்கு அவர்களின் உடல் எடை காரணமாக இருக்கிறது.
- நாம் அடிக்கடி கார்பனேட்டட் சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் காஃபியை குடித்து வந்தால், அவை நமது சிறுநீர்ப்பையில் எரிச்சலைத் தூண்டுகிறது. இதனால் அடிக்கடி சிறுநீர் கட்டுப்படுத்த முடியாத பிரச்சனைகள் ஏற்படுகிறது.
- பெண்களின் பிரசவத்திற்கு பின் அவர்களின் கர்ப்பப்பை கீழிறங்கிய நிலையில் இருக்கும். இதனால் சிறு நீர்ப்பைக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டு, சிறுநீர் கட்டுப்படுத்த முடியாமல் வெளியேற்றும் பிரச்சனைகள் உண்டாகிறது.
Loading...