சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 92.43 ரூபாய், டீசல் லிட்டருக்கு 85.75 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 92.43 ரூபாய், டீசல் லிட்டர் 85.75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமின்றி அதே விலையில் நீடிக்கிறது.
சமீப காலமாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து பெட்ரோல், டீசல் விலை கடந்த சில நாட்களாக விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.