Loading...
உள்நாட்டு அரிசியின் விலை 8 ரூபாவால் குறைவடைந்துள்ளதாக அரிசி இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அரிசி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதைத் தொடர்ந்து உள்நாட்டு அரியின் விலை குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் கேமக பண்டார தெரிவித்துள்ளார்.
அரிசி மீதான இறக்குமதி வரியை 65 ரூபாவால் குறைப்பதற்கு அரசாங்கம் கடந்த 6 ஆம் நாள் நடவடிக்கை எடுத்திருந்தது.
Loading...
இதனடிப்படையில், அரிசி இறக்குமதி தீர்வை வரியான 15ரூபாவை மாத்திரம் அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன் மூலம் தனியார் வர்த்தகர்களுக்கும் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியிருந்தது.
இதன்மூலம் ஒரு கிலோகிராம் அரிசியினை 76 ரூபாவிலும் குறைவான விலைக்கு விற்பனை செய்யமுடியுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.
Loading...