சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் தொடரின் கீழ் நான்கு புதிய லேப்டாப்களை அறிமுகப்படுத்திய பின்னர், இந்த வரிசையில் ஐந்தாவதாக சாம்சங் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா என்ற லேப்டாப்பையும் அறிமுகம் செய்துள்ளது.
இது உற்பத்தியாளரின் அமெரிக்க இணையதளத்தில் நேரடியாக வாங்குவதற்கு கிடைக்கிறது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி புக் புரோ தொடர்களை அறிமுகம் செய்த Unpacked Event நிகழ்வின் போது இது குறித்த எந்த விவரங்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்டெல் கோர் i5 செயலியுடன் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 மாடல் $849 (தோராயமாக ரூ.63,000) விலையில் கிடைக்கிறது, இன்டெல் கோர் i7 செயலி உடன் கருப்பு மற்றும் வெள்ளி வண்ண விருப்பங்களில் கிடைக்கும் மடலுக்கு $1,049 (தோராயமாக ரூ.77,700) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி புக் ஃப்ளெக்ஸ் 2 ஆல்பா 13.3 இன்ச் QLED முழு HD (1,920×1,080 பிக்சல்கள்) touch screen டிஸ்பிளேவை 400 நைட்ஸ் பிரைட்னஸ் மற்றும் அவுட்டோர் பயன்முறையில் 600 நைட்ஸ் பிரைட்னஸ் உடன் வழங்குகிறது. மடிக்கணினியில் 2-இன்-1 படிவ காரணி உள்ளது, இதை நீங்கள் ஒரு டேப்லெட்டாகவும் பயன்படுத்தலாம்.
மடிக்கணினி 11 வது தலைமுறை இன்டெல் கோர் i5 / கோர் i7 செயலி உடன் ஆற்றல் பெறுகிறது, ஆனால் இரண்டு மாடல்களுக்கும் இடையே சிறிது வேறுபாடுகள் உள்ளன. இன்டெல் கோர் i5 செயலி கொண்ட மாடல் 8 ஜிபி LPDDR4X ரேம் மற்றும் SSD 256 ஜிபி ஸ்டோரேஜுடன் இணைக்கப்பட்டுள்ளது, இன்டெல் கோர் i7 CPU உடனான வேரியண்ட்டில் 16 ஜிபி LPDDR4X RAM மற்றும் 512 ஜிபி SSD ஸ்டோரேஜ் உள்ளது.
இணைப்பு அம்சங்களுக்காக 2 x யூ.எஸ்.பி 3.2 டைப்-A போர்ட்கள், 1x யூ.எஸ்.பி டைப்-C போர்ட், 1x HDMI போர்ட், 1x மைக்ரோ SD கார்டு ஸ்லாட் மற்றும் 3.5 மி.மீ ஹெட்போன் ஜேக் ஆகியவை உள்ளன.
வயர்லெஸ் இணைப்பிற்காக, புளூடூத் 5.1 மற்றும் வைஃபை 6 போன்ற அம்சங்கள் உள்ளது. கூடுதல் அம்சங்களில் அலுமினிய கட்டமைப்பு, பேக்லிட் கீபோர்டு, கண்ணாடி டிராக்பேட், 720p வெப்கேம், மேம்பட்ட பாதுகாப்பிற்கான கைரேகை ஸ்கேனர், இரட்டை வரிசை மைக்ரோஃபோன்கள் மற்றும் ஒரு ஜோடி 1.5W டால்பி அட்மோஸ் ஆடியோ ஆதரவுடனான ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.