உலகளாவிய ரீதியில் பரவிவரும் கொவிட் தொற்று நிலைமை காரணமாக, கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் பேரணிகள், கூட்டங்களின்றி சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, சர்வதேச தொழிலாளர் தின செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இத்தகைய பேரழிவு சூழ்நிலையில், இலங்கையின் உழைக்கும் மக்கள் அனைவரும் சுகாதார வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றி, மே தினத்தை புதிய வழியில் கொண்டாடுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தாங்கள் உறுதியாக செயற்பட்டதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
‘மக்கள் நலன் சார்ந்த பணியிடம் பாதுகாப்பான தேசம்’ எனும் தொனிப்பொருளிலான இவ்வாண்டு மே தினத்தில் தேசிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு உழைக்கும் மக்கள் அனைவரும் கைகோர்ப்பார்கள் என்று தாம் நம்பிக்கை கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.