மோட்டோ G40 ஃப்யூஷன் கடந்த மாதம் இந்தியாவில் மோட்டோ G60 ஸ்மார்ட்போன் உடன் அறிமுகமானது. இந்த ஸ்மார்ட்போன் இப்போது இந்தியாவில் வாங்குவதற்கு கிடைக்கிறது. மோட்டோ G40 ஃப்யூஷன் ஸ்மார்ட்போனை பிளிப்கார்ட்டில் வாங்கலாம்.
மேலும் இது ஐசிஐசிஐ வங்கி கார்டுகளில் ரூ1,000 உடனடி தள்ளுபடி மற்றும் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளுக்கு 10% தள்ளுபடி போன்ற சலுகைகளுடன் வருகிறது. மோட்டோ G40 ஃப்யூஷனில் எக்சேஞ்ச் ஆஃபர்கள் மற்றும் No-Cost EMI விருப்பங்களும் உள்ளது.
மோட்டோ G40 ஃப்யூஷன் போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் ரூ.13,999 விலையில் கிடைக்கிறது. இது 6 ஜிபி RAM மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது, மேலும் இந்த மாறுபாட்டின் விலை ரூ.15,999 ஆகும். ஸ்மார்ட்போன் டைனமிக் கிரே மற்றும் ஃப்ரோஸ்டட் ஷாம்பெயின் ஆகிய இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது ஒரு பஞ்ச்-ஹோல் டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
விவரக்குறிப்புகளைப் பொறுத்தவரை, மோட்டோ G40 ஃப்யூஷன் 6.8 இன்ச் முழு HD+ டிஸ்ப்ளே 120 Hz புதுப்பிப்பு வீதம் மற்றும் HDR 10 ஆதரவுடன் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732G செயலி உடன் இயக்கப்படுகிறது, இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மைக்ரோ SD கார்டு வழியாக இதை 1TB வரை மேலும் விரிவாக்கலாம்.
இது 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழம் சென்சார் ஆகியவற்றைக் கொண்ட மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. செல்ஃபிக்களுக்காக, மோட்டோ G40 ஃப்யூஷன் 16 மெகாபிக்சல் முன் கேமராவைக் கொண்டுள்ளது.
மோட்டோ G40 ஃப்யூஷன் 6000 mAh பேட்டரியை 20W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் கொண்டுள்ளது. மென்பொருள் முன்னணியில், மோட்டோ G40 ஃப்யூஷன் ஆண்ட்ராய்டு 11 உடன் இயநன்கும். பின்புற கைரேகை சென்சார், 3.5 மிமீ ஹெட்போன் ஜேக், யூ.எஸ்.பி டைப்-C போர்ட் மற்றும் 4ஜி LTE போன்ற இணைப்பு வசதிகளும் இதில் உள்ளது.
ரூ.15000 முதல் ரூ.20000 விலைப்பிரிவில் 64 MP கேமரா, 6000 mAh பேட்டரி, 6 GB RAM கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க எதிர்பார்க்கிறீர்கள் என்றால் இந்த ஸ்மார்ட்போன் சிறந்த தேர்வாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதும் இல்லை.