Loading...
பொதுவாக மாதவிடாய் வரும் காலம் என்பது 28 நாட்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பெண்ணும் அந்த காலகட்டத்தில் 30 முதல் 40 எம்எல் ரத்தத்தை அந்த காலகட்டத்தில் இழக்க வேண்டியிருக்கும்.
சிலருக்கு இதனை விட அதிகப்படியான ரத்தப்போக்கு காணப்படுவதும் உண்டு. ஒரு சிலர் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை பொறுத்துக் கொள்ள முடியாமல் மாத்திரைகளையும், சுடு தண்ணீரை எடுத்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
அதிலும் சிலர் மாதவிடாய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பல பெண்கள் அதிகப்படியான ரத்தப்போக்கை சமாளிக்கமுடியாமல் தவிக்கின்றனர். இ
Loading...
துபோன்ற பிரச்சினைகளை எளியமுறையில் சமாளிக்க ஒரு சில வழிகள் உள்ளது.
அந்தவகையில் மாதவிடாய் காலத்தில் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
- மாதவிடாய் காலத்தில் சரியான நாப்கின்களை தேர்வு செய்வது அவசியம். மென்மையான மற்றும் தரமான நாப்கின்களை தேர்ந்தெடுக்கும்போது ரத்தப்போக்கை உறிஞ்சிக்கொள்வதுடன், தடிப்புகளில் இருந்து பாதுகாக்கும். மென்மையான வெளிப்புற அடுக்குகள் கொண்ட நாப்கின்கள் சிறந்த தீர்வை கொடுக்கும்.
- மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய உணவுகளை எடுத்துக்கொள்ளும்போது, கடுமையான வலி மற்றும் இதர பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கப்படுவீர்கள்.
- மாதவிடாய் காலத்தில் கடுமையான உடற்பயிற்சிகள் செய்ய முடியாவிட்டாலும், சிம்பிளான பயிற்சிகளை தொடருங்கள். இதுபோன்ற உடலியல் பயிற்சிகள் செய்யும்போது சுறுசுறுப்பாக இருக்க முடியும். உடலை மிகவும் ஆக்டிவாக வைத்துக்கொள்ளலாம். மாதவிடாய் மூலம் உருவாகும் வலியும் குறையும்.
- பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் நெருக்கும்போது எரிச்சல், கோபம் போன்ற உணர்வு நிலையில் மாற்றம் ஏற்படும். அந்த சமயங்களில் காஃபைன், ஆல்ஹகால் போன்றவற்றை எடுப்பதை தவிர்க்க வேண்டும். சிறிய அளவில் அடிக்கடி உணவு எடுத்துக்கொள்ளுங்கள்.
- மாதவிடாய் காலத்தில் சுகாதாரத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ரத்தப்போக்கு அதிகம் இருக்கும்போது அதனை உடனடியாக சுத்தம் செய்து, அந்த இடம் ட்ரையாக இருக்க வேண்டும். வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தம் செய்வது சிறந்தது.
- பிறப்புறுப்பை பாதிக்காத வகையில், மிகவும் hygiene சோப்புகள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி சுத்தமாக இருக்கலாம். 4 முதல் 6 மணி நேரத்துக்குள் நாப்கின்களை மாற்றுவதை மறந்துவிடாதீர்கள். இதனால், அரிப்பு மற்றும் தொற்றுகளால் பாதிக்காமல் இருக்கலாம்.
Loading...