Loading...
பொதுவாக தாடி வைத்திருக்கும் ஆண்கள் அனைவரும் அதற்காக ஒவ்வொரு கதையை வைத்திருப்பார்கள்.
ஆனால் அதில் பெரும்பாலான ஆண்கள் ஸ்டைலுக்காக வளர்ப்பதை விட காதலில் தோல்வி என்ற பெயரில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
Loading...
எனவே இது போன்ற தாடி வளர்ப்பதில் பல உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற நன்மைகளும் நிறைய உள்ளது.
தாடி வளர்ப்பதால் கிடைக்கும் உடல் நல நன்மைகள்
- சமீபத்திய ஆய்வின்படி, சூரியனிலிருந்து வரும் 95 சதவீத புறஊதாக் கதிர்கள் நம் சருமத்தை நேரடியாகத் தாக்காதவாறு, தாடி தான் பாதுகாக்கிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு சரும புற்றுநோயின் தாக்கம் குறைவாக உள்ளது.
- நமது சருமத்தில் தூசி உள்ளிட்ட பல அலர்ஜிகளைத் தடுப்பதில் தாடியின் பங்கு முக்கியமானதாக உள்ளது. எனவே இதனால் ஆஸ்துமா பிரச்சனை வரமால் தடுக்கிறது.
- தாடி வளர்ப்பதால், சூரியனின் தாக்கம் மிகவும் குறைவாக இருக்கும். இதனால் வயதான தோற்றம் தென்பட்டலும், உண்மையில் நாம் நீண்ட ஆண்டுகளுக்கு இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.
- குளிர்காலங்களில் தாடி வைத்திருப்பதன் மூலம் அதிகமான குளிரை தாங்கிக் கொள்ள முடிகிறது. எனவே தாடி நமக்கு எந்த அளவுக்கு அடர்த்தியாக உள்ளதோ, அந்த அளவுக்கு நமக்கு குளிருக்கு இதமாக இருக்கும்.
- சுத்தமாக ஷேவ் செய்திருப்பவர்களுக்கு நோய்த் தொற்றுக்கள் எளிதாகத் தொற்றிக் கொள்கிறது. எனவே தாடி அதிகமாக வைத்தவர்களுக்கு, பாக்டீரியா உள்ளிட்ட நோய்த் தொற்றுக்களின் தாக்கம் குறைவாக இருக்கிறது.
- ஷேவிங்கின் போது ஏற்படும் வெட்டுக் காயங்கள், பருக்கள் உள்ளிட்ட சருமக் குறைபாடுகள் தாடி வைத்திருந்தால் ஏற்படாது. அப்படியே இருந்தாலும் அது நமது அழகை கெடுக்கும் வகையில் இருக்காது.
- தாடி வைத்திருப்பதால் குளிர்ந்த காற்றை அது எப்போதும் தக்க வைத்துக் கொள்ளும் இதனால் நமது சருமத்தில் ஏற்படும் வறட்சி தடுக்கப்பட்டு, நல்ல ஈரப்பதம் கிடைக்கும்.
Loading...