தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதனையடுத்து, கட்சிகளின் முன்னணி நிலவரம் வெளியாகத் தொடங்கியுள்ளது. இதில், திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என 5 முனை போட்டி நிலவுகிறது.
தற்போது, அரசியல் பிரபலங்கள் வாக்கு எண்ணும் மையம் நோக்கி படையெடுத்துள்ளனர். இதனையடுத்து, சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக போட்டியிட்ட மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையில் 3933 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதேப்போல், கோவை தெற்கு வாக்கு எண்ணும் மையத்திற்கு கமல்ஹாசனும், சேப்பாக்கம் வாக்கு எண்ணும் மையத்திற்கு உதயநிதி ஸ்டாலினும் விரைந்துள்ளனர்.
கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 1,391 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார் 1,345 வாக்குகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளார். பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் 860 வாக்குகள் பெற்றுள்ளார்.