லோதா கமிட்டி பரிந்துரைகளை அமல்படுத்தாததால் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியில் இருந்து அனுராக் தாகூரை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. செயலாளர் அஜன் ஷிர்கேவும் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய கிரிக்கெட் வாரிய தலைவராக யார் நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
லோதா கமிட்டியின் பரிந்துரைகளின் தகுதி உடையவர்தான் கிரிக்கெட், வாரிய தலைவராக நியமிக்கப்பட வேண்டும். இந்த நிலையில் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவிக்கு முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெயர் அடிபட்டது. தற்போது பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக கங்குலி உள்ளார்.
லோதா கமிட்டி பரிந்துரைப்படி ஒருவர் கிரிக்கெட் வாரிய நிர்வாக பதவியில் 9 ஆண்டுகள் மட்டுமே இருக்க முடியும். அதுவும் ஒவ்வொரு 3 ஆண்டுக்கும் இடைவெளி இருக்க வேண்டும் பெங்கால் கிரிக்கெட் வாரிய நிர்வாக பதவியை கங்குலி ஏற்று 3 ஆண்டுகள் முடிய போகிறது. அவர் கிரிக்கெட் வாரிய நிர்வாக பதவியை ஏற்க விரும்பினால் பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இதுபற்றி கங்குலி கூறுகையில் நான் எதை பற்றியும் (கிரிக்கெட் வாரிய தலைவர் பதவி) சிந்திக்கவில்லை. பெங்கால் கிரிக்கெட் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் எண்ணம் இல்லை என்றார்.