தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6ம் திகதி சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 72.78 சதவித வாக்குகள் பதிவானது.
இந்நிலையில், இன்று மே 2ம் திகதி வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் உள்ள மொத்தம் 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 14 சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இதில் பல தொகுதிகளுக்கு 30 சுற்றுகள் நடக்கும். குறிப்பாக 3 தொகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட சுற்றுகள் வரை வாக்கு எண்ணக்கை நடக்கும்.
தற்போது வரை 3-4 சுற்றுகள் வரை வாக்கு எண்ணப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 140 தொகுதிகளில் முன்னிலைப்பெற்றுள்ளது. அதிமுக 93 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலைப்பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி நாம் தமிழர் கட்சி எந்த தொகுதியிலும் முன்னிலைப்பெறவில்லை, எனினும் பல மாவட்டங்களில் மூன்றாவது இடத்தை பிடித்து மிகப் பெரிய கட்சியாக உருமாறி வருகிறது.
இருப்பினும் சீமான் தான் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில் தொடர்ந்து பின்னடைவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.