Loading...
எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் செல்வதை விட காய்ச்சல், இருமல், சளி போன்ற வியாதிகளுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்.
Loading...
இதனால் பக்கவிளைவுகள் ஏதுமின்றி இயற்கையான மருந்துகளின் மூலம் நிவாரணம் கிடைக்கும்.
எலுமிச்சை, உப்பு, மிளகு ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் நன்மைகள்
- ஒரு டம்ளர் சூடான தண்ணீரில், 1 டீஸ் புண் உப்பு மற்றும் அரை தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து குடித்து வந்தால், கடுமையான இருமல் மற்றும் தொண்டைப் புண் போன்ற பிரச்சனைகள் உடனே சரியாகிவிடும்.
- மூக்கடைப்பு பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், மிளகு, சீரகம், இலவங்கப்பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை சம அளவு எடுத்து தூள் செய்து, இந்தக் கலவையை மெதுவாக முகர்ந்துக் கொண்டு வந்தால், மூக்கடைப்பு மற்றும் தும்மல் பிரச்சனைகள் குணமாகிவிடும்.
- பித்தக்கற்கள் பிரச்சனைகள் மூலம் கஷ்டப்படுபவர்கள், 3 துளிகள் ஆலிவ் ஆயில், சிறிதளவு எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மிளகுப் பொடி கலந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- வாய் புண் இருப்பவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் உப்பை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து, அதை வாயில் வைத்து நன்றாக கொப்பளித்து துப்ப வேண்டும். இதனால் வாயில் இருக்கும் கெட்ட பாக்டீரியாக்கள் அழிந்து, வாய் புண்களும் விரைவில் குணமாகிவிடும்.
- ஒரு கப் சூடான நீரில், 1/4 டீஸ்பூன் மிளகுப் பொடி, 2 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள்ஸ்பூன் தேன் ஆகியவற்றைச் சேர்த்துக் கலந்து குடித்தால், நமது உடம்பில் உள்ள கெட்டக் கொழுப்புகள் அனைத்தும் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைந்து விடும்.
- திடீரென குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டால், அதற்கு ஒரு டம்ளர் சூடான தண்ணீரில், 1 டேபிள்ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1டீஸ்பூன் மிளகு பொடியை கலந்து குடிக்க வேண்டும்.
- ஆஸ்துமா பிரச்சனை இருப்பவர்கள், 10 மிளகு, 2 கிராம்பு, 15 துளசி இலைகள் ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கண்ணாடி குடுவையில் 15 நிமிடம் வரை மூழ்க வைத்து, பின் அதனுடன் சிறிது தேன் கலந்து அதை குடித்து வந்தால், நல்ல மாற்றம் கிடைக்கும்.
- பல்வலி பிரச்சனையால் அவதிப்படுபவர்கள், 1/2 டீஸ்பூன் கிராம்பு எண்ணெய், 1/2 டீஸ்பூன் மிளகுப் பொடி ஆகியவற்றைக் கலந்து, அதை பற்களில் ஒரு நாளைக்கு இரண்டு முறைகள் தடவி வந்தால், விரைவில் பல்வலி குணமாகிவிடும்.
- குளிர்காய்ச்சல் மூலம் பாதிக்கப்பட்டவர்கள், ஒரு கப் சூடான நீரில் எலுமிச்சைப் பழத்தின் தோல்களை 10 நிமிடம் வரை ஊற வைத்து, பின் அதிலிருந்து எலுமிச்சை தோலை நீக்கிவிட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
Loading...