மக்கள் நீதி மய்யம், அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் செயல்பாட்டை பார்க்கும் 3 ஆண்டுகால ஆசை நிராசையாக போனதை நினைத்து ரஜினி ரசிகர்கள் இன்று கருப்பு தினமாக அனுசரிக்கிறார்கள்.இந்தியாவில் அனைவரும் கொண்டாடும் நட்சத்திரமாக திகழ்பவர் ரஜினிகாந்த். எப்போதும் ரசிகர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் அக்கறை கொண்டுள்ள ரஜினிகாந்த் அரசியலிலும் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பினார்கள்.’ ஆனால் ரஜினிக்கோ அரசியலுக்கு வர விருப்பமே இல்லை. காரணம் அரசியல் அவரது நற்குணத்திற்கு செட் ஆகாத ஒரு துறையாகும்.
ரஜினி
படையப்பா படத்தில் மீச வச்ச குழந்தைப்பா என ஒரு வரி வரும். அது ரஜினிக்கு அரசியலில் பொருந்தும். யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர் ரஜினிகாந்த். யார் வென்றாலும் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது, யார் இறந்தாலும் அவர்களது குடும்பத்தினருக்கு இரங்கல் செய்தி அனுப்புவது என ரஜினி இருப்பார்.
மந்திரம்
இந்த நிலையில் என்ன மாயமோ என்ன மந்திரமோ தெரியவில்லை, கடந்த 2017ஆம் ஆண்டு தான் அரசியலுக்கு வருவதாகவும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகவும் ரஜினி தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். அன்றைய தினத்தை பெரிதும் கொண்டாடினர்.
முழுமனதோடு
பின்னர் 3 ஆண்டுகள் அமைதியாக இருந்த நிலையில் மீண்டும் தான் அரசியலுக்கு வருவதை ஊர்ஜிதப்படுத்தினார். அந்த நாளே ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என எல்லாமே! ரஜினிகாந்த் அவரை வாழ வைத்த மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என முழுமனதோடு களத்தில் இறங்கினார்.
உயிர்கொல்லி
ஆனால் இநத கொரோனா எனும் உயிர்க் கொல்லியால் அவர் தனது அரசியல் முடிவை திரும்ப பெற்றார். ரஜினியை எல்லாரும் தனது வீட்டில் ஒருவராகவே பார்த்தார்கள். முதலில் ரஜினியின் அறிவிப்பால் கோபம் வந்தாலும் பின்னர் நம் அப்பாவாக இருந்தால் கொரோனா காலத்தில் வெளியே அனுப்ப முற்படுவோமா என நினைத்து ரசிகர்கள் தங்களையே சமாதானம் செய்து கொண்டார்கள்.
மக்கள் நீதி மய்யம்
இந்த நிலையில் இன்றைய தினம் அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளுக்கு மக்கள் அளித்திருக்கும் செல்வாக்குகளை பார்த்துவிட்டு இதே ரஜினி மட்டும் கட்சி தொடங்கி இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தால் தேர்தல் முடிவுகள் வேற லெவலில் இருந்திருக்கும்.
தலைவர் என்ன செய்வது? அரசியலைவிட தலைவரின் நலனே முக்கியம் என தேற்றி கொள்கிறார்கள். எனினும் ஒரு சிலர் இன்றைய தினம் கருப்பு தினமாகவே கருதுகிறார்கள். அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலோ அல்லது வரும் சட்டசபை தேர்தலிலோ ரஜினிகாந்த் கட்சி தொடங்கி மக்கள் பணியாற்ற வேண்டும் என ரசிகர்கள் விரும்புகிறார்கள்.