பிரபல திரைப்பட நடிகர் தனுஷ் எங்களின் மகன் தான் எனவும் எங்களுக்கு வாழ்க்கை செலவாக மாதம் 65 ஆயிரம் ரூபாய் அவர் தர வேண்டும் எனவும் மதுரையை சேர்ந்த கதிரேசன், மீனாட்சி தம்பதிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிபதிகள், தனுஷ் தரப்பில் இதற்கு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கானது நேற்று விசாரணைக்கு வந்த போது நடிகர் தனுஷ் தரப்பில் பதில் விளக்க மனு ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. மேலும் பதில் மனுவுக்கு கால அவகாசம் வேண்டும் என தனுஷ் தரப்பு வழக்கறிஞர் கேட்டுள்ளார்.
அவர் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் வழக்கை மார்ச் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
தனுஷ் கஸ்தூரிராஜா மகன் தான் என அவர் தரப்பு நபர்கள் கூறிவரும் நிலையில் பதில் மனுவை உடனே தாக்கல் செய்யாமல் கால அவகாசத்தை தனுஷ் தரப்பு கேட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.