Loading...
தற்போதைய சூழலில் தாதியர்கள் அனைவரும், அதிக பணிச்சுமை காரணமாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா இதனைத் தெரிவித்துள்ளார். குறைந்தளவான தாதியர்களைக் கொண்ட பணிக்குழாமினரே சேவையில் ஈடுபடுவதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது 38,000 தாதியர்கள் மொத்தமாக சேவையாற்றி வருகின்றனர்.
Loading...
எனினும், இந்த எண்ணிக்கையின் இரு மடங்கு எண்ணிக்கையான தாதியர்கள் அவசியமாக உள்ளனர் என அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கத்தின் உபசெயலாளர் புஷ்பா ரம்யானி டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.
Loading...