Loading...
நாட்டில் நாளொன்றில் அடையாளம் காணப்பட்ட அதிகளவான கொவிட்-19 தொற்றாளர்கள் நேற்று (04) பதிவாகினர்.
நேற்று முன்தினம் 1,891 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம், 1,923 பேருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.
அவர்களில், புத்தாண்டு கொத்தணியில் 1,913 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.
Loading...
அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வந்த 10 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக நாளொன்றில் 1, 500 இற்கும் அதிகமான கொவிட் 19 தொற்றாளர்கள் பதிவாகி வருகின்றனர்.
இந்த நிலையில், தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை, 113,676 ஆக அதிகரித்துள்ளது.
இதையடுத்து, வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 14,758 ஆக உயர்வடைந்துள்ளது.
Loading...