தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற மு.க ஸ்டாலினை வாழ்த்திய நடிகை ப்ரியா பவானி சங்கர் எடப்பாடி பழனிச்சாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து பல்வேறு தரப்பினரும் திமுக மற்றும் முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக தமிழ் திரையுலகினர் வாழ்த்து மழை பெய்துள்ளனர். அந்த வகையில் முன்னாள் பத்திரிக்கையாளரும், தற்போதைய முன்னணி நடிகையுமான ப்ரியா பவானி சங்கர் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில், நீண்ட காலத்துக்கு பிறகு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் @mkstalin அவர்கள் தலைமையில் தமிழ்நாடு. பேரிடரிடையே பதவி ஏற்றாலும் இங்கிருந்து சிறப்பாக வழிநடத்துவீர்கள் என்று சாமானியர்கள் முன் எப்போதையும் விட பல மடங்கு நம்பிக்கையுடன் உங்களை பார்த்துக்கொண்டிருக்குறோம்.வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார்.
அதாவது எடப்பாடி பழனிச்சாமி மக்களால் முதல்வராக தேர்தெடுக்கப்படவில்லை என மறைமுகமாக விமர்சித்திருந்தார்.
இந்த டுவிட்டர் பதிவுக்கு கீழே நபர் ஒருவர் அடடே மேடம் நீங்களே திருட்டு திராவிட சொம்பு தான என பதிவிட்டார்.