அனைத்து உயிரினங்களும் உயிர் வாழ தண்ணீர் என்பது முக்கியமான ஒன்றாகும். அந்தவகையில் நம்முடைய உடலுக்கும் அதிகளவில் தண்ணீர் சத்து தேவைப்படுகிறது.
காலையில் எழுந்தததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கிறது என பார்ப்போம்.
காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் அழுக்கை எளிதாக வெளியேற்ற முடியும்.
ஒற்றை தலைவலி பிரச்சினையை சரிசெய்ய தண்ணீர் உதவுகிறது. வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்துவதோடு கலோரிகளை வேகமாக எரிக்க செய்கிறது.
இதனால் உடல் எடை குறைகிறது. எனவே காலை எழுந்தவுடன் பல் தேய்ப்பதற்கு முன்பாக ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
அதன் பிறகு 45 நிமிடங்கள் வரை எதையும் சாப்பிடக்கூடாது. தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் மூலம் 25 சதவீதம் வளர்ச்சிதை மாற்ற வீதத்தை உயர்த்துகிறது.
அதோடு மட்டுமல்லாமல் உணவை செரிக்க வைத்து விரைவில் செரிமானத்தை தூண்டுகிறது. மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அவசியம்.
நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மண்டலத்துக்கு நன்மை கிடைக்க வேண்டுமானால் அதற்கு நீர்ச்சத்து மிகவும் தேவை. நோய் தொற்றுகளை எதிர்த்து போராட நீர்ச்சத்து உடலில் போதுமான அளவில் இருக்க வேண்டும்.