கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில், புற்றுநோய், இருதய நோய் காரணமாக இறக்கும் நபர்கள் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையில் உள்ளடக்கப்பட மாட்டார்கள் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய பொதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,
கொவிட் தொற்றிய நிலையில், வேறு நோய்கள் காரணமாக இறக்கும் நபர்களை நாங்கள் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் உள்ளடக்க மாட்டோம்.
உதாரணமாக நேற்று இரண்டு மரணங்கள் நிகழ்ந்தன. கொவிட் தொற்றி இருந்தாலும் அவர்கள் லியூகேமியா நோய் முற்றியதால் இறந்துள்ளனர். கொவிட் இந்த மரணங்களுக்கு காரணமில்லை.
இருதய நோய் காரணமாக உயிரிழப்பவர்களுக்கும் கொவிட் வைரஸ் தொற்று காரணமில்லை. இவ்வாறான நோய்களால் இறப்பவர்களை நாங்கள் கொவிட் மரணங்கள் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார்கள் எனவும் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.