அதுவும் 2021 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 1:09 மணிக்கு மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்து, அங்கு மே 28 ஆம் தேதி இரவு 11:44 மணி வரை இருக்கவுள்ளார்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ரிஷப ராசிக்கு செல்லும் சுக்கிரனால் 12 ராசிக்காரர்களும் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதை இப்போது காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இக்காலம் நன்மை பயக்கும் காலமாக இருக்கும். இக்காலத்தில் நீங்கள் புத்திசாலித்தனமாக செயல்படுவீர்கள். அதே சமயம் தைரியமாக இருக்க வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட வேண்டும். செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உங்கள் செலவுகளை கண்காணிக்க வேண்டும். உங்கள் மனைவியுடன் சில முரண்பாடுகள் ஏற்படலாம். எனவே, கவனமாக இருங்கள். எந்தவொரு தவறான புரிதலுக்கும் இடமளிக்காமல் கூலாக இருங்கள். மேலும் சரியான தகவல்தொடர்புகளைப் பராமரியுங்கள். இந்த காலகட்டம் உங்கள் வேலையில் உங்கள் உள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும். இது எதிர்காலத்தில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணத்தின் வருகை குறித்து நீங்கள் சில சிக்கல்களை சந்திக்க நேரிடும். ஆனால் இது தற்காலிகம் தான் என்பதால் கவலைப்பட வேண்டாம். உங்கள் ஆரோக்கியமும் சாதகமாக இருக்கும். இருப்பினும் குளிர்ச்சியான உணவுப் பொருட்கள் சாப்பிடுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், சளி மற்றும் இருமல் பிரச்சனையால் கஷ்டப்பட நேரிடும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்கால கட்டம் உங்கள் உங்கள் வாழ்க்கையில் பெயரையும் புகழையும் தரும். சமூக வட்டத்திற்குள் உங்களின் நிலை மேம்படும். நீங்கள் சில சக்திவாய்ந்த/செல்வாக்குள்ளவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். தனிநபர்களுடனான உங்கள் உறவு தனிப்பட்ட மற்றும் நிதி முன்னணியில் உங்களுக்கு சில நல்ல வாய்ப்புகளைத் தரும். இக்காலம் உங்களை மேம்படுத்துவதற்கான சிறந்த காலம். ஷாப்பிங்கில் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் ஒரு புதிய வேலையைத் தேடுகிறீர்களானால், இக்காலம் உங்களுக்கு சாதகமாக மாறும். சிறு ஆரோக்கிய பிரச்சனைகள் உங்களை கவலையில் ஆழ்த்தும் என்பதால் உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் நீங்கள் சற்று குழப்பத்திலேயே இருப்பீர்கள். இந்த காலத்தில் ஆன்மீக செயல்பாடுகள், தியானம் மற்றும் சடங்குகளை மேம்படுத்துவது உங்களுக்கு மிகவும் முக்கியம். மேலும் இக்கால கட்டத்தில் சற்று சோம்பேறியாக இருக்கக்கூடும். இந்த சுக்கிர பெயர்ச்சியின் போது, நீங்கள் வெளிநாடுகளில் சிறந்த பண ஆதாயத்தைப் பெறலாம். படிப்பைத் தொடர நீங்கள் திட்டமிட்டால், நீங்கள் வெளிநாட்டில் கல்வியைத் தொடரலாம். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலப் பிரச்சினை காரணமாக உங்களுக்கு சில நிதி பிரச்சனைகள் ஏற்படலாம். ஆடம்பரத்திற்காக நீங்கள் பணத்தை செலவிட விரும்பலாம். இருப்பினும், பணத்தை செலவழிப்பதில் கவனமாக இருங்கள் மற்றும் எதிர்காலத்திற்கான பணத்தை சேமிப்பதில் அக்கறை கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் நிதி நிலைமையை மேம்படுத்த எந்த ஆபத்தையும் எடுக்க வேண்டாம்.
கடகம்
கடக ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீடு நண்பர்கள், ஆதாயங்கள் மற்றும் வருமானம் மற்றும் ஆசைகளை பிரதிபலிக்கிறது. இக்காலம் உங்களுக்கு மிகவும் ரொமான்டிக்காக இருப்பதோடு, நீங்கள் காதலிப்பவருடன் இணைந்திருக்க விரும்புவீர்கள். அரசியல் தொடர்புகளையும் வளர்த்துக் கொள்வீர்கள், உலக விவகாரங்களில் ஆர்வம் காட்டுவீர்கள். இந்த காலகட்டத்தில், உங்கள் நண்பர் வட்டம் விரிவடையும். பல குணாதிசயங்களைக் கொண்டவர்களை சந்திப்பீர்கள். இக்காலம் உங்கள் காதல் வாழ்க்கைக்கு நன்மை பயக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதலுடன் சில அற்புதமான நேரத்தை செலவிடப் போகிறீர்கள். நீங்கள் சொத்துக்களிலிருந்து பயனடைய வாய்ப்புள்ளது. உங்கள் மூத்த உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கக்கூடும். இந்த பெயர்ச்சியின் போது, நீங்கள் உங்கள் உறவுகளை மேம்படுத்துவீர்கள். இது உங்களுக்கு நிதி ஸ்திரத்தன்மையை வழங்கும். மேலும் இக்காலத்தில் உங்கள் தகவல்தொடர்பு திறன்களையும் மேம்படுத்துவீர்கள். இது உங்கள் வாழ்க்கையில் நன்மை பயக்கும் என்பதை நிரூபிக்கும். உங்கள் தந்தையிடமிருந்து ஆலோசனையைப் பெறுவது நிதி ரீதியாக உங்களை வளர உதவும். புதிய சொத்து அல்லது வாகனம் வாங்குவது பற்றிய சிந்தனை இருந்தால், ஒரு நல்ல நிகழ்வு அல்லது செயல்பாடு உங்கள் வீட்டில் ஒழுங்கமைக்கப்படலாம். இது உங்கள் வீட்டுச் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இது இந்த ராசிக்காரரின் அதிர்ஷ்டத்தை உயர்த்தும். இந்த கட்டத்தில், நீங்கள் நீண்ட பயணங்களுக்கு பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. உயர்கல்வியைத் தொடர இது ஒரு நல்ல நேரம். ஏனெனில் இக்காலம் உங்களுக்கு சாதகமான முடிவுகளைத் தரக்கூடிய காலம். மேலும் பல பலனளிக்கும் வாய்ப்புகளையும் நீங்கள் பெறுவீர்கள். பதவி உயர்வு அல்லது வேலை பரிமாற்றம் மிகவும் சாத்தியமாக இருப்பதால் தொழில் மற்றும் நிதி முன்னணியும் நன்றாக இருக்கும். உங்களுக்கான பணத்தின் வரத்து அதிகரிக்கும். இதையொட்டி, நீங்கள் நிதி ரீதியாக வலுவாக இருக்க வாய்ப்புள்ளது. உங்கள் இளைய உடன்பிறப்புகளும் சிறந்த நன்மைகளைப் பெறுவார்கள். முக்கியமாக உங்கள் குடும்பத்தில் சில நல்ல நிகழ்வுகள் நடக்கப் போகின்றன.
துலாம்
துலாம் ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் மிகவும் சக்திவாய்ந்த நபராக இருக்க விரும்புவார்கள். பெற்றோரின் சொத்து விற்பனையில் லாபத்தைப் பெறுவீர்கள். இந்த கட்டத்தில் உங்கள் நிதி நிலைமை பலம் பெறும். நீங்கள் சில சொத்துக்களை வாங்க முனைந்திருக்கலாம். இருப்பினும் நிதி தொடர்பான விஷயத்தில் எந்தவொரு பெரிய முடிவையும் எடுப்பதைத் தவிர்க்கவும். மேலும், உங்கள் உடல்நலம் மற்றும் செய்யும் செலவுகளை கவனித்துக் கொள்ளுங்கள். திருமணமானவராக இருந்தால், உங்கள் மாமியாருடன் விழாவில் கலந்து கொள்வீர்கள். இக்காலத்தில் உங்கள் மாமியாருடனான உறவு வலுபெறும். இக்கால கட்டத்தில் நீங்கள் தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கலாம். ஆனால் கவலைப்பட தேவையில்லை. ஏனெனில் இது இறுதியில் மிகவும் லாபகரமானதாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இக்காலம் காதல் திருமணத்தில் சில தடைகளை கொண்டு வரும். வணிகத்தில் உங்கள் பேச்சின் சக்தி அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள். திருமணமாகாதவர்கள் தான் காதலிப்பவரிடம் இருந்து ஒரு நல்ல செய்தியைப் பெறலாம். வணிகத்தில் சில செல்வாக்குமிக்க நபர்களுடன் நீங்கள் கூட்டாளராக நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தொழில் புரிபவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம். உங்கள் வணிக கூட்டாளர்களுடன் தவறான புரிதல் ஏற்படக்கூடும். எனவே அவர்களுடன் தொடர்பு கொள்ளும்போது எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். திருமணமானவர்கள், தங்கள் துணைக்காக அதிக செலவு செய்யக்கூடும் மற்றும் இது அவர்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.
தனுசு
தனுசு ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் சண்டைகள், உறவுகளில் வாதங்களை உருவாக்கலாம் மற்றும் எதிரி தொல்லைகளையும் ஏற்படுத்தக்கூடும். உங்கள் தனிப்பட்ட செலவுகள் அதிகரிக்கக்கூடும் என்றாலும், இந்த பெயர்ச்சியின் போது உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். போட்டி முயற்சிகளுக்கு இது மிகவும் சாதகமான காலமாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நலப் பிரச்சினைகள் சில கவலைகளை ஏற்படுத்தக்கூடும். இக்காலத்தில் நீங்கள் சில போட்டியாளர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், எனவே தேவையற்ற விவாதங்கள் மற்றும் வாதங்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்க வேண்டாம். ஏனெனில் அவர்களிடமிருந்து நீங்கள் எந்த லாபத்தையும் பெற மாட்டீர்கள். நீரினால் பரவும் நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள், ஏனெனில் அவை காரணமாக நீங்கள் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
மகரம்
மகர ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீடு காதல் விவகாரங்கள், ஓய்வு, மகிழ்ச்சி மற்றும் பேரின்பம் ஆகியவற்றைக் குறிக்கிறது. உங்கள் ஆரோக்கியத்தையும் உங்கள் காதல் வாழ்க்கையையும் கவனித்துக் கொள்ளுங்கள். இக்காலத்தில் கருத்தரித்தால் அழகான குழந்தைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. இந்த காலத்தில் நீங்கள் நல்ல நிதி நிலைமையால், ஒரு வசதியான நிலையில் இருப்பீர்கள். திருமணமாகாதவர்கள், தனது நீண்ட கால தோழி/தோழனிடம் தன் காதலை வெளிப்படுத்தலாம். ஏற்கனவே உறவில் உள்ளவர்கள், உறவுக்கு இடையில் ஈகோவை வர விடாதீர்கள். முக்கியமாக தொழில் வாழ்க்கையில் நீங்கள் பதவி உயர்வு பெறவோ அல்லது ஒரு படி மேலே செல்லவோ வாய்ப்புள்ளதால் இது தொழில் வளர்ச்சிக்கு சாதகமான காலமாகும்.
கும்பம்
கும்ப ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இந்த வீடு குடும்பம் மற்றும் உறவுகள், சொத்து மற்றும் வீட்டு வாழ்க்கை மற்றும் தாயைக் குறிக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் தனது வீட்டை அழகுபடுத்தவோ அல்லது புதுப்பிக்கவோ மிகவும் ஆர்வமாக இருப்பார். முக்கியமாக நீங்கள் வீட்டிலேயே தங்கி உங்களை தனிமைப்படுத்தி, உங்கள் வீட்டை ஏற்பாடு செய்வதிலும் அலங்கரிப்பதிலும் ஈடுபடுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளது,. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அமைதியும் நல்லிணக்கமும் நிறைந்ததாக இருக்கும். உங்கள் வீட்டைப் புதுப்பிக்க பணத்தை செலவிடலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் உடல்நலம் திருப்திகரமாக இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் எந்தவொரு சொத்திலும் முதலீடு செய்யத் திட்டமிட்டிருந்தால், இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிக நன்மை பெறுவீர்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம். இக்காலத்தில் குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிட்ட பிறகு, உங்கள் மன அழுத்தங்கள் மறையும்.