Loading...
பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தப்பட வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த விடயம் தொடர்பாக வர்த்தமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாககுறிப்பிடப்பட்டுள்ளது.
Loading...
எனவே இனி வரும் நாட்களில் கட்டாயம் முச்சக்கர வண்டிகளில் மீட்டர் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிகளவான முச்சக்கர வண்டி சாரதிகள் முச்சக்கர வண்டிகளுக்கு மீட்டர் பொருத்தியிருந்தாலும் சிலர் மீட்டர் பொருத்துவதை மறுக்கின்றமையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Loading...