Loading...
கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் பதிவான வீதி விபத்துக்கள் காரணமாக 205 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேநேரம் குறித்த காலக் கட்டத்தில் 1,959 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன், அதில் சிக்குண்டு காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,254 ஆக பதிவாகியுள்ளது.
Loading...
இதேவேளை இவ் ஆண்டில் அதிகளவான விபத்துக்கள் ஏப்ரல் மாத்திலேயே இடம்பெற்றுள்ளதுடன், அவற்றில் பெரும்பாலான விபத்துக்கள் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.
அதன்படி மேல் மாகாணத்தில் 768 விபத்துக்களும், வடமேல் மாகாணத்தில் 238 விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன. மேலும் ஒட்டுமொத்தமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகளே அதிகளவில் விபத்தில் சிக்குண்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Loading...