கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இந்த நிலையில், நோய் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
மாஸ்க் அணிதல், தனிமனித இடைவெளியை கடைபிடித்தல், தனியார் நிறுவனங்களில் முறையாக விதிகளை பின்பற்றுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறிபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இந்த சூழலில், மாநகராட்சி பகுதிகளில் கொரோனா விதிமீறல் தொடா்பாக அதிகாரிகள் நாள்தோறும் ஆய்வு செய்து வருகின்றனா். அதன்படி கோவை மாநகராட்சிப் பகுதிகளில் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட ஆய்வில் பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் இருந்த 100 பேரிடம் ரூ.20 ஆயிரமும், கொரோனா விதிமுறை மீறயதாக 332 வா்த்தக நிறுவனங்களுக்கு ரூ.70 ஆயிரத்து 650 அபராதமும் விதிக்கப்பட்டது.
அதன்படி நேற்று ஒரே நாளில் பொது மக்கள், தனியார் நிறுவனங்களிடம் இருந்து ரூ. 90 ஆயிரத்து 650 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.