நாட்டில் பெரும்பாலான மக்கள் பல சுகாதார பிரச்சனைகளால பாதிக்கப்படுகிறார்கள். காலநிலை மாற்றங்கள், உணவு பழக்கவழக்கம், வாழ்க்கை முறையால் பல ஆரோக்கிய பிரச்சனைகளால் நம் உடல் நலம் பாதிக்கப்படுகிறது. பலர் நாள்பட்ட நோயால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகிறது.குயெல்ப் பல்கலைக்கழகம் நடத்திய புதிய ஆய்வின்படி, அவகேடோ பழத்தில் உள்ள ஒரு கலவை ரத்த புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்க உதவக்கூடும் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் உயிரணு வளர்ச்சிக்கு முக்கியமானது. இதை விஞ்ஞானிகள் முதன்முறையாக அடையாளம் கண்ட ஒரு நொதியை இந்த பழம் குறிவைக்கிறது என்று கூறப்படுகிறது. இக்கட்டுரையில் அவகேடோ பழம் புற்றுநோய் சிகிச்சைக்கு எவ்வாறு உதவுகிறது என்று காணலாம்.
மைலோயிட் லுகேமியா
கடுமையான மைலோயிட் லுகேமியா என்பது இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜையில் உள்ள மைலோயிட் செல்கள் முதிர்ச்சியடையாத வடிவங்களின் புற்றுநோயாகும். அக்யூட் மைலோயிட் லுகேமியா (ஏ.எம்.எல்) அல்லது கடுமையான மைலோயிட் லுகேமியா, சில எலும்புகளின் மென்மையான உள் பகுதி மைலோபிளாஸ்ட் (ஒரு வகை வெள்ளை இரத்த அணுக்கள்), சிவப்பு ரத்த அணுக்கள் அல்லது அசாதாரண பிளேட்லெட்டுகளை ஏற்படுத்தும் ஒரு வகை புற்றுநோயாகும். இருப்பினும், பல சந்தர்ப்பங்களில், இது இரத்தத்தில் விரைவாக இயங்கும்.
ஆராய்ச்சி
சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வு, கடுமையான மைலோயிட் லுகேமியா (ஏ.எம்.எல்) மீது கவனம் செலுத்தியது. இது லுகேமியாவின் மிகவும் அழிவுகரமான வடிவமாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்கள் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடம்தான் இது நிகழ்கின்றன. மேலும் 10 சதவீதத்திற்கும் குறைவான நோயாளிகள் நோயறிதலுக்கு ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகும் உயிர்வாழ்கின்றனர். லுகேமியா செல்கள் அவற்றின் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபட்டுள்ள வி.எல்.சி.ஏ.டி எனப்படும் நொதியின் அளவு அதிகமாக உள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இது எவ்வாறு உதவுகிறது?
எந்தவொரு புற்றுநோய்க்கும் இலக்காக VLCAD அடையாளம் காணப்படுவது இதுவே முதல் முறை. ஆராய்ச்சியாளர்கள் குழு பல சேர்மங்களுக்கிடையில் ஊட்டச்சத்து கலவைகளை வெளிக்கொணர்ந்தது. நொதியைத் தடுக்கும் பொருளை தேடும் முயற்சியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டனர். பின்னர், அது அவகேடோ பழத்திலிருந்து பெறப்பட்டது.
ஆரோக்கியமான கொழுப்பு
முன்னதாக, நீரிழிவு நோயைத் தடுப்பதற்கும் உடல் பருமனை நிர்வகிப்பதற்கும் சாத்தியமான பயன்பாட்டிற்காக அவகேடோ பழங்களில் மட்டுமே காணப்படும் கொழுப்பு மூலக்கூறான அவகாடின் பி யை இந்த ஆராய்ச்சியாளர்கள் சோதனை செய்தனர். இப்போது, இந்த பழத்தை லுகேமியா நோயாளிகளுக்குப் பயன்படுத்துவதற்கு ஆர்வமாக உள்ளனர் ஆராய்ச்சியாளர்கள்.
பரிசோதனை
இந்த வகை சிகிச்சைக்கு பொருத்தமான நோயாளிகளை அடையாளம் காண வி.எல்.சி.ஏ.டி ஒரு நல்ல மார்க்கராக இருக்கக்கூடும். இது மருந்தின் செயல்பாட்டை அளவிடுவதற்கான குறிப்பானாகவும் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினார். இது மனித மருத்துவ பரிசோதனைகளில் இந்த மூலக்கூறின் இறுதியில் பயன்படுத்தப்படுவதற்கான கட்டத்தை அமைக்கிறது.