கூந்தலில் ஏற்படும் அனைத்து விதமான பிரச்சனைகளையும் தீர்க்கும் தன்மை கொண்டது கரிசலாங்கண்ணி. அதை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம்.
கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை.
ஏன் என்றால் இந்த மூலிகை மஞ்சள் காமாலை, ரத்த சோகை, குழந்தை கண்ணுக்கு மை தீட்டுவதற்கு, முடி வளர்ச்சிக்கு, கீரையாகவும் பருப்புடன் மசியலாக சாப்பிடலாம். நிறைய மருத்துவதன்மை வாய்ந்த இந்த மூலிகையை நாம் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும்.
இளநரை மாற :
கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் 1/2 தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். 2 மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
தலைமுடி அடர்த்தியாக வளர :
கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணையில் ஊற வைத்து, தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.
முடி கருமையடைய :
ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, 200 மி.லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும். படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறுவதை காணலாம்.