ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து பொருளாதார நிகழ்ச்சி நிரல் உருவாக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
புதிதாக அரச சேவையில் உள்ளீர்க்கப்படும் முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு நேற்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற பிரதமர், பொருளாதார நிகழ்ச்சி நிரல் பற்றி கருத்து வெளியிட்டிருந்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், ஒவ்வொரு அமைச்சிற்கும் தனித் தனியாக பொருளாதார கொள்கைகள் வகுக்கப்படும்.
இதன் ஊடாக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட வேண்டிய மற்றும் தனியார் துறையினர் பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டிய துறைகளை அடையாளம் காண முடியும்.
நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையில் பொருளாதார கொள்கைகளை வகுத்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை உருவாக்க முடியும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.