பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு (வயது 74) இன்று அதிகாலை காலமானார் . இவர் சின்னத் தம்பி, திருமதி பழனிசாமி, உள்ளத்தை அள்ளித்தா, காதல் கோட்டை, ஏழையின் சிரிப்பில் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் குணச்சித்திர பாத்திரங்களிலும் . தினம் தினம் தீபாவளி, உறவுகள் சங்கமம், வள்ளி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார்.
இவர் சமீபத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டுவின் உயிர் பிரிந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கே.வி.ஆனந்த், விவேக் போன்ற நல்ல நடிகர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது நடிகர் பாண்டுவும் உயிரிழந்திருப்பது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.