பாகிஸ்தானில் லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்த நிலையில், அவர் சுடப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த திங்கட் கிழமை பாகிஸ்தானின் லாகூரில் இருக்கும் குடியிருப்பில் Mahira Zulfiqar என்ற லண்டனைச் சேர்ந்த 24 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக மீட்கப்பட்டார்.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இதன் முதற்கட்ட பிரேதபரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், Mahira Zulfiqar துப்பாக்கியால் சுடபட்டு கொல்லப்பட்டுள்ளதாகவும், அவரின் கை மற்றும் கழுத்துப் பகுதியில் அதற்கான காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிசார் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட இரண்டு பேரை தேடி வருவதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், Mahira Zulfiqar இரண்டு பேரை திருமணம் செய்து கொள்ள விரும்பி, அதில் ஏற்பட்டதன் விளைவே இது என்று கூறப்படுகிறது. ஆனால், அது குறித்து எந்த ஒரு உறுதியான தகவல்கள் இல்லை.
இவரின் இறுதிச்சடங்கு லாகூரில் இருக்கும் மசூதியில் நடைபெற்றது இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் பொலிசார் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபரை நெருங்கிவிட்டதாகவும், ஆனால் இன்னும் கைது செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் Mahira Zulfiqar, தன்னுடைய மாமாவான Mohammad Nazeer-யிடம் ஏற்கனவே தனக்கு இரண்டு ஆண்களால் மிரட்டல்கள் வருவதாகவும், அவர்கள் திருமணம் செய்து கொள்ளும் படி அச்சுறுத்தியதாகவும் கூறியுள்ளார்.
இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், பொலிசார் இரண்டு பேர் மீது தங்களுடைய சந்தேகப்பார்வையை வைத்துள்ளனர். அவர்கள் தான் என்பது உறுதியானால் பின்னர் தகவலை வெளியிடுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி Mahira Zulfiqar-ன் செல்போன்களை ஆராய்ந்து வருவதுடன், சம்பவம் நடந்த இடத்தின் அருகே இருக்கும் சிசிடிவி கமெராக்களையும் பொலிசார் ஆராய்ந்து வருகின்றனர்.