கொரோனா அச்சம் காரணமாக வீடியோ காலில் புரோகிதர் மந்திரம் ஓத நவீன திருமணம் நடைபெற்றது.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மேடக் மாவட்டத்தில் உள்ள சோமாலி கிராமத்தை சேர்ந்த சிவராம் என்பவரின் மகள் மஞ்சுளாவிற்கும், அதே பகுதியில் உள்ள பீமலா கிராமத்தை சேர்ந்த மோகன் என்பவருக்கும் பீமலா கிராமத்தில் உள்ள மணமகன் வீட்டில் திருமணம் நடத்த நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பீமலா கிராமத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டு வாலிபர் ஒருவர் நேற்று மாலை மரணம் அடைந்து விட்டார். எனவே அந்த திருமணத்தை நடத்தி வைக்க ஒப்புக்கொண்ட புரோகிதர் பீமலா கிராமத்திற்கு வர மறுத்துவிட்டார்.
இந்த நிலையில் அனைவரும் கூடி பேசி ஆலோசனை செய்த பின் புரோகிதர் வீடியோ காலில் மந்திரம் ஓத மஞ்சுளா, மோகன் ஆகியோரின் திருமணம் பீமலா கிராமத்தில் இன்று காலை நடைபெற்றது.