ரயில்வே ஊழியர்களிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதன் காரணமாக இலங்கை ரயில்வே கடுமையான ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளதாக ரயில்வே தொழிற் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
சுகாதார வழிகாட்டுதல்கள், கொவிட்-19 பரவுவதைத் தணிக்கவும் தடுக்கவும் சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதால் தொற்று பரவுவது வேகமாக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்காலத்தில் ரயில்வே அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றால், ஏராளமான ஊழியர்கள் கொரோனா வைரஸால் பதிப்படையக் கூடும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் இது ரயில் பயணிகளையும் அதிக ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்றும் இலங்கை ரயில்வே தொழிற் சங் கத்தினர் எச்சரித்துள்ளனர்.