தங்கள் நாட்டு எல்லையை நோக்கி வந்த வெளிநாட்டு விமானத்தை இடைநிறுத்தி திருப்பி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, கருங்கடல் மற்றும் Okhotsk கடலுக்கு மேலே பறக்கும் ஏராளமான அமெரிக்க விமானங்களைத் ரஷ்யா ஜெட் விமானங்கள் தடுத்து துரத்தி அனுப்பி வருகிறது.
இந்நிலையில், Chukotsk கடலுக்கு மேலே பறந்த அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான RC-135 உளவு விமானமானத்தை, ரஷ்ய MiG-31 போர் விமானம் தடுத்து துரத்தி அனுப்பியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
Chukotsk கடலுக்கு மேற்பரப்பில் விமானம் ஒன்று ரஷ்ய எல்லையை நோக்கி வருவது கண்டறியப்பட்டது.
குறித்த விமானத்தை அடையாளம் காணவும், ரஷ்ய வான்வெளி எல்லையை மீறுவதைத் தடுக்கவும், பசிபிக் கடற்படையின் வான் பாதுகாப்புப் படையிலிருந்து MiG-31 போர் விமானம் புறப்பட்டுச் சென்றது.
ரஷ்ய MiG-31 போர் விமானக் குழுவினர், எல்லை நோக்கி வந்த விமானம் அமெரிக்க விமானப்படையின் RC-135 உளவு விமானம் என அடையாளம் கண்டனர்.
பின்னர் அதை இடைநிறுத்தி ரஷ்ய எல்லைக்கு அப்பால் துரத்தி அனுப்பி வைத்தனர் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க உளவு விமானம் ரஷ்ய எல்லையிலிருந்து திரும்பிச்சென்றதை அடுத்து , ரஷ்ய போர் விமானம் தனது சொந்த விமானநிலையத்திற்கு பாதுகாப்பாக திரும்பியது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.