பிரித்தானியாவில் இளைஞர் கும்பல் ஒன்றிடம் சிக்கிய ஆதரவற்ற நபரை காப்பாற்ற சென்ற நபரை, அந்த கும்பல் கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
லைண்டன், எசெக்ஸ் பகுதியிலேயே குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று 34 வயதான James Gibbons என்பவர் தெருவோரம் தங்கியிருந்த ஆதரவற்ற நபர் ஒருவருக்கு உணவளிக்க சென்றுள்ளார்.
தமது பிள்ளைகள் இருவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த James Gibbons தெருவோரத்தில் இருந்த அந்த நபர் மீது இரக்கப்பட்டு, அந்த நேரத்தில் உணவளிக்க சென்றுள்ளார்.
ஆனால் அதேவேளை நான்கு பேர் கொண்ட இளைஞர் கும்பல் ஒன்று அந்த ஆதரவற்ற நபரை துன்புறுத்துவதை ஜேம்ஸ் கிப்பன்ஸ் கண்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அவர், அந்த கும்பலை துரத்தியுள்ளார். ஆனால் அந்த இளைஞர் கும்பலில் ஒருவர், தாம் வைத்திருந்த கத்தியால் ஜேம்ஸ் கிப்பன்ஸ் மீது சரமாரியாக தாக்க, ரத்தவெள்ளத்தில் சரிந்துள்ளார் ஜேம்ஸ் கிப்பன்ஸ்.
தமது வருங்கால மனைவி விக்டோரியாவின் குடியியிருப்புக்கும் சில அடி தொலைவிலேயே ஜேம்ஸ் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 13 மற்றும் 16 வயதுடைய 2 பெண்கள் உட்பட்ட நால்வரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இருவரை காவலில் வைத்துள்ள பொலிசார், எஞ்சிய இருவரை விசாரணைக்கு பின்னர் விடுவித்துள்ளனர். ஞாயிறன்று இரவு சுமார் 9.30 மணியளவில் நடந்த இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருக்கு உதவ கோரிக்கை வைத்துள்ளனர்.
ஜேம்ஸ் தமது நான்கு பிஞ்சு குழந்தைகள் மற்றும் வருங்கால மனைவி விக்டோரியாவுடன் வசித்து வந்துள்ளார். இதில் இரட்டையர்களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் இடையிலேயே உணவுடன் வெளியே என்ற ஜேம்ஸ் இளைஞர்கள் கும்பலால் கொல்லப்பட்டுள்ளார்.