பிரான்ஸ் நாட்டில் இருந்து புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன.
உலகில் அதிசக்தி வாய்ந்த போர் விமானங்களாக பிரான்ஸ் நாட்டு தயாரிப்பான ரபேல் விமானங்கள் உள்ளன. இந்த விமானங்களை இந்தியா வாங்குவதற்கு முடிவு செய்தது. இதற்காக 36 விமானங்கள் ரூ.59,000 கோடி செலவில் வாங்குவதற்கு 2016ம் ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து படிப்படியாக விமானங்களை தயாரித்து பிரான்ஸ் நாடு இந்தியாவுக்கு அவற்றை அனுப்பி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29ம் தேதி முதல் விமானம் இந்தியாவுக்கு வந்தது. அதைத்தொடர்ந்து இதுவரை 5 தடவை விமானங்கள் அங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளன.
அதன்படி 17 விமானங்கள் இதுவரை வந்துள்ளன. இப்போது புதிதாக 3 விமானங்களை பிரான்ஸ் நாடு அனுப்பி வைத்தது. அந்த விமானங்கள் நேற்று இரவு ஜாம் நகரை வந்தடைந்தன. வழியில் அந்த விமானங்களுக்கு ஐக்கிய அரபு நாட்டின் நடுவானில் பெட்ரோல் நிரப்பப்பட்டது. பின்னர் அவை ஜான் நகரை வந்தடைந்தன. அங்கிருந்து அம்பாலா படைப்பிரிவு கொண்டுசெல்லப்படுகிறது.
புதிதாக 3 விமானங்கள் வந்ததன் மூலம் இந்திய விமானப்படையில் 20 ரபேல் ரக விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அம்பாலா படை பிரிவிலும் மேற்குவங்க பிரிவிலும் சேர்க்கப்படுகின்றன. மீதி உள்ள விமானங்களும் அடுத்தடுத்து வர உள்ளன. இந்தியப் படையில் ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்டது இந்தியப் படையின் சத்தியை பல மடங்கு அதிகரித்துள்ளது.