வானொலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட கௌதமி, கோபமாக வெளிநடப்பு செய்த சம்பவ ஒரு நாடகம் என கூறப்படுகிறது.
சமீபத்தில் வானொலி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகை கௌதமி தன்னிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகளால் கோபம் அடைந்து பேட்டியை இடைநிறுத்தம் செய்து வெளியேறியுள்ளார்.
பேட்டியின் போது அவரிடம், கமலை எதற்காக பிரிந்தீர்கள்? ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக மோடிக்கு எழுதப்பட்ட கடிதம். இவைகளை விளம்பரத்திற்காக செய்தீர்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டது.
இதனால் கோபம் அடைந்த கௌதமி, நான் பேட்டியை முடித்துக்கொள்கிறேன். முதல் முறையாக ஒரு பேட்டியிலிருந்து வெளியேறுவது இப்போதுதான் என கூறியுள்ளார்.
இந்நிலையில், இவை ஒரு நாடகமே என கூறப்படுகிறது. அதாவது தனியார் வானொலியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கு கௌதமி ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
அதனை மக்களிடம் வித்தியாசமான முறையில் தெரிவிப்பதற்காகவே இவ்வாறு நடந்துகொண்டார் என கூறப்படுகிறது.